மருந்து கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து 10 மில்லியன் டொலர் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலும், நிதியுதவி அல்லது மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி உலக சுகாதார அமைப்பு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் சுகாதார அமைச்சு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
அரச வைத்தியசாலைகளில் சில மருந்துகளுக்கும் உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு காணப்படுவதாகவும், அதனை சரியாக நிர்வகித்து தொடர்ச்சியாக மருந்துகளை வழங்குவதை உறுதிப்படுத்துகின்ற திட்டமொன்றை தயாரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்நியச் செலாவணி சிரமம் காரணமாக கடன் கடிதங்களை சரியான நேரத்தில் திறக்க முடியாத நிலை ஏற்பட்டமையினால், சில மருந்துகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதற்கான சில தீர்வுகள் கண்டறியப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்திய சலுகைக் கடன் வசதியின் கீழ் கடன் கடிதங்களைத் திறந்து மருந்துகள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான வேண்டுகோளை விடுப்பது அதில் ஒன்றாகும். இரண்டாவதாக, மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து 10 மில்லியன் டொலர் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், நிதியுதவி அல்லது மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி உலக சுகாதார அமைப்பு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் சுகாதார அமைச்சு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
தட்டுப்பாடான மருந்துகள் அல்லது ஏனைய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான நிதியினை அல்லது நன்கொடையினை வழங்குமாறு வெளிநாட்டு நிர்வனங்களிடமும், வெளிநாட்டு மற்றும் வெளிநாடுகளில்
வசிக்கின்ற இலங்கையர்களிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்கனவே சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் ஏனைய உபகரணங்களில் தட்டுப்பாடு இல்லை என உத்தியோகபூர்வமான ஆதாரமொன்றை சுட்டிக்காட்டி அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களும் சேர்க்கப்பட்டு திருத்தப்பட வேண்டும் என்பதை சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.