ஓய்வூதியக்காரர்களின் நலன் கருதி இம்மாதத்திற்குரிய ஓய்வூதியக் கொடுப்பனவை எதிர்வரும் 10ஆம் திகதி வழங்குவதற்கு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொவிட் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துளளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் விசேட ஆலோசனைக்கு அமைய முப்படையினர், பொலிஸார், மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் இணைந்து இந்த விசேட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார்.
இதற்கமைவாக ,ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் சிரேஷ்ட பிரஜைகள் தங்களின் வீடுகளிலிருந்து வங்கிக்கு சென்று திரும்புவதற்குரிய விசேட போக்குவரத்து திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
ஓய்வூதிய கொடுப்பனவை வழங்கும் வங்கிகளும் எதிர்வரும் 10ஆம் திகதி திறக்கப்படும் என கொவிட் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துளளார்.