உள்நாடுபிராந்தியம்
பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் நியமனம்
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் யாழ்.மாவட்ட பதிவாளர் நாயக திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர்களுக்கான நியமனம் இன்றையதினம் (18) வழங்கிவைக்கப்பட்டது.
இந் நியமனம் வழங்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.எஸ்.முரளிதரன், பிரதம கணக்காளர் திரு.என். சிவரூபன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என். கமலராஜன், பிரதி பதிவாளர் நாயகம் திரு.கே.நடராஜா, காணிப்பதிவாளர் திருமதி.எஸ்.குணாஜினி, மாவட்ட பதிவாளர் திருமதி.த.ஆர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.