(நதீர் சரீப்தீன்)
கொழும்பு – காலிமுகத்திடல் (கோடாகோகமயில்) நேற்று இரவு (17) காலி முகத்திடலில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை தந்திருந் தைக் காணக்கூடியதாக இருந்துடன் நள்ளிரவைத் தாண்டியும் மக்கள் சாரை சாரையாக வருகை தந்த வண்ணம் இருந்தனர்.
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டமானது ஓய்வின்றி எட்டாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் நாளாபக்கங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்திருந்தனர். கைக்குழந்தை முதற்கொண்டு வயோதிபர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி அனைவரும் பங்கு கொண்டு அரசாங்கத்திற்கு அதிலும் எதிர்ப்பினைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர். காலிமுகத்திடலில் மக்கள் வெள்ளம் அலைமோதியது.
அவ்வப்போது மக்களுக்கு அவசியமான குடிநீர்.பானங்கள்,.உணவு வகைகள் தனவந்தர்களால் வழங்கப்பட்டு வருகின்றன