உள்நாடுபிராந்தியம்
பலாங்கொடை. நகரில் பாரிய ஆர்ப்பாட்டம்
(பலாங்கொடை நிருபர்)
எரிபொருள் விலைகள் அதிகரிப்பை காரணமாகக் கொண்டு பதுளை கொழும்பு பிரதான பாதையை வழிமறித்து மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் (19) ஈடுபட்டு வருகின்றனர்
நகரின் கடிகார கோபுரத்திற்கருகிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது
அரசாங்கத்திற்கு எதிரான இவ்வார்ப்பாட்டத்தின்போது அம்புயுலன்ஸ் வண்டி ஒன்று வருகை தந்த வேளை உடனடியாக அவ்வண்டிக்கு செல்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் வழிவிட்டமை விசேட அம்சமாகும்
ராஜபக்ஷ பரம்பரையினருக்கு வீட்டுக்குச் செல்லுமாறு பல்வேறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஆர்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.