சுற்றுலா மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் ஆளும்கட்சியின் முதற்கோலாசான்( the Chief Government Whip) பதவியில் இன்று (19) பாராளுமன்றத்தில் உள்ள ஆளும்கட்சியின் முதற்கோலாசான் காரியாலயத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இதன்போது, அரசாங்க சேவைகள், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன, கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன, ஊடக அமைச்சர் (கலாநிதி) நாலக கொடஹேவா, இராஜாங்க அமைச்சர்களான இந்திக அனுருத்த, பியல் நிஷாந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான சஹன் பிரதீப் விதான, கௌரவ மிலான் ஜயதிலக்க, உபுல் மஹேந்திர ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற வரலாற்றுக்கு அமைய ஆளும் கட்சியின் முதற்கோலாசான் பதவியை முதன்முறையாக வகித்தவர் கௌரவ ஆர்.எஸ்.என். குணவர்தன ஆவார். கௌரவ ஏ.ஈ. குணசிங்க, கௌரவ சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரா, கௌரவ டபிள்யு.ஜே.சி. முனசிங்க, கௌரவ. ஜே.டி. வீரசேகர, கௌரவ எஸ்.கே.கே. சூரியாராச்சி, கௌரவ எம்.பி.டி.இஸட். சிறிவர்தன, கௌரவ ஜே.ஆர். ஜயவர்தன, கௌரவ கே.பி. ரத்நாயக்க, கௌரவ வின்சன்ட் பெரேரா, கௌரவ கலாநிதி விமல் விக்ரமசிங்க, கௌரவ ரிச்சட் பத்திரன, கௌரவ ரெஜி ரணதுங்க, கௌரவ மஹிந்த சமரசிங்க, கௌரவ ஜெயராஜ் பர்னாந்துபுல்லே, கௌரவ தினேஷ் குணவர்தன, கௌரவ கயந்த கருணாதிலக்க மற்றும் கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து ஆகியோர் இதற்கு முன்னர் ஆளும்கட்சியின் முதற்கோலாசான் பதவியை வகித்துள்ளனர்.