crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக இரத்த தான நிகழ்வு

இலங்கையில் 2019 ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக மாவட்ட சம்மேளனம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச சம்மேளனம் ஆகியன இணைந்த ஒழுங்கமைப்பில் காவியா பெண்கள் சுய தொழில் அபிவிருத்தி மற்றும் மொபிட்டெல் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் சமூக நல்லிணக்கத்துடன் ஆன இரத்ததான முகாம் இன்று (21) வியாழக்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் பணிமனையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட இரத்ததான நிகழ்வின்போது 150 இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் இரத்தக் கொடையினை வழங்கியிருந்ததுடன், இதன் போது மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தவர்களின் ஆன்ம சாந்திக்காக பிரார்த்தனையிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி.திருமதி.யேசுதாசன் கலாராணி, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக மாவட்ட சம்மேளனத்தின் தலைவர் வீ.சஜந்தன் உள்ளிட்ட இளைஞர்கள் கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 56 − = 51

Back to top button
error: