கொழும்பு – காலிமுகத்திடலில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பொலிஸ் சார்ஜெண்ட் ஏப்ரல் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் டி.எம். அமரதாச எனும், பொலிஸ் சார்ஜென்ட்டே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.