crossorigin="anonymous">
வெளிநாடு

இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறையால் 12 மாநிலங்களில் மின்செட்டு

”இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக பெரிய அளவில் வெற்றுப் பேச்சுக்களை பேசி மாய பிம்பத்தை உருவாக்கி வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் நாட்டில் 8 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பண வீக்கம் அதிகரித்து வருகிறது. நிலக்கரி பற்றாக்குறையால் மி்ன்வெட்டு ஏற்பட்டால் சிறுதொழில்களை அழித்துவிடும். இதனால், அதிக அளவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும்” என ராகுல் காந்தி நேற்றுமுன்தினம் நிலக்கரி பற்றாக்குறை குறித்து மத்திய அரசை சாடினார்.

ராகுல் குற்றம் சுமத்திய அடுத்த சில மணி நேரங்களில் தமிழகம், மஹாராஷ்ட்ரா, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நேற்றுமுன்தினம் திடீரென பல மணி நேர மின் வெட்டு இரவு நேரங்களில் நிகழ்ந்தது. நேற்று இரவும் இந்த நிலை பல மாநிலங்களில் நீடித்தது. உச்சக்கட்டமாக, மத்திய பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிக்கொண்டிருக்கும்போதே மின்வெட்டு நிகழ்ந்தது. மேடையில் அவரும், “நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு நிகழ்கிறது” என்று விளக்கம் கொடுத்தார்.

கடந்த சில வாரங்களாக நிலக்கரி தட்டுப்பாடு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தன. இப்போது நிலைமை மோசமடைந்ததன் விளைவாக மின்வெட்டு ஏற்பட துவங்கியுள்ளது. கோடை காலம் தொடங்கி, மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது மின்வெட்டு.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 3

Back to top button
error: