இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கையில் வசிக்கும் மக்கள் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதன் காரணமாக, இதுவரை 42 இலங்கை தமிழர்கள் இந்தியா தமிழகத்திற்கு அகதிகளாக வந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.இந்நிலையில், நேற்று ஒரே இரவில் 18 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து 18 இலங்கை தமிழர்கள் அகதிகளாக பைபர் படகு மூலம் தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர்.
தனுஷ்கோடி வந்த இலங்கை தமிழர்களை மெரைன் போலீசார் மீட்டு மண்டபம் மெரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் இலங்கை தமிழர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.(பிபிசி)