crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவில் தமிழ் டயஸ்போரா நிதி உதவியில் கூட்டுறவுக்கான நிதி வழங்கல்

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டுறவினை வளப்படுத்தும் நோக்கில் தமிழ் டயஸ்போரா நிதி உதவியில் வி.பி பவுண்டேசன் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டு அதில் உள்ள அங்கத்தவர்களுக்கு வாழ்வாதார உதவிக்கான நிதி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேராவில் கிராமத்தில் முதற்கட்ட நிதி கொடுப்பனவு நேற்று (21) தேராவில் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை ஊக்கிவிக்கும் நோக்கில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட கூட்டுறவு கிராமங்களில் தேராவில் கூட்டுறவு கிராமத்தில் உள்ள அங்கத்தவர்களுக்கு வி.பி.பவுண்டேசன் ஊடாக கிராம மக்கள் அபிவிருத்தி அறக்கட்டளை ஊடாக ஒரு பயனாளிக்கு தலா 30 ஆயிரம் ரூபா வீதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் டயஸ்போரா கூட்டுறவாளர்களின் நிதி சட்டபூர்வமாக நாட்டிற்குள் கொண்டுவந்து பொருளாதார வளர்ச்சியினை ஏற்படுத்தும் நோக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் விவசாயம், கால்நடைவளர்ப்பு மற்றும் சுயதொழில் ஆகியவற்றுக்காக இந் நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கூட்டுறவு கிராமங்களின் பயனாளர்களுக்கும் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந் நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், வி.பி.பவுண்டேசனின் மாவட்ட இணைப்பாளர், கிராம அலுவலகர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கான நிதி உதவியினை வழங்கி வைத்துள்ளார்கள்.

.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 79 + = 83

Back to top button
error: