கட்டாரில் பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகளைத் தொடர்ந்து நீதி மன்றத்தின் மூலம் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள 20 இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் விடுதலை வழங்கியுள்ளது.
கட்டாரில் பணியில் ஈடுபட்டிருந்தபோது பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் தொடர்புபட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பலருக்கு புனித நோன்பு மாதத்தை முன்னிட்டு அந்நாட்டு அரசாங்கம் விடுதலை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
கட்டார் நாட்டின் மன்னரான சேக் தமீம் பின் ஹமத் அல்தானி புனித நோன்பு மாதத்தை முன்னிட்டு அரச கௌரவம் என்ற ரீதியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறைக் கைதிகளுக்கு விடுதலையை அறிவித்துள்ளார்.