
கேகாலை – ரம்புக்கனையில் கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயற்சி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் நேற்றையதினம் (22) கைது செய்யப்பட்டார், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கேகாலை நீதவான் நீதிமன்றில் இன்று (23) முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணை வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நேற்றையதினம் (22) குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்தார். ரம்புக்கனை, பின்னவல வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்
குறித்த நபர் இன்றையதினம் (23) பிற்பகல் கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
சந்தேகநபரை ரூ. 100,000 கொண்ட இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். ஆயினும் பிணையாளர்கள் இன்மையால், பிணை நிபந்தனை பூர்த்தி செய்யப்படாமை தொடர்பில் குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.