crossorigin="anonymous">
உள்நாடுபொது

இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்படுமானால் அதன் தலைவர் நானே – மஹிந்த ராஜபக்ச

இலங்கையில் ஏற்பட்டுள்ள  பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு போராட்டக்காரர்கள் விடுத்த கோரிக்கையை அந்நாடு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சனிக்கிழமை நிராகரித்தார். “மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர்கள் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ள முடியாதபோது, இதுபோன்ற அரசியல் அமைப்புகளால் எந்தப் பயனும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

ஒருவேளை அப்படியொரு அமைச்சரவை அமைந்தால் அதற்கு நானே தலைவன் என்றும் அவர் கூறினார். முக்கிய இறக்குமதிகளை செய்ய இயலாத வகையில் போதிய பணமின்றி இலங்கை அரசாங்கம் தவித்து வருவதாகக் கூறி ஏப்ரல் 9ஆம் தேதி முதல் இலங்கையின் பல்வேறு நகர வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டக்காரர்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கையில் இடைக்கால அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்படுமானால், அது தனது தலைமையிலேயே ஸ்தாபிக்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறினார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் இந்த கருத்தை அவர் வெளியிட்டார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அல்லது வேறு அமைச்சர்களைக் கொண்டு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு, ஏனையோர் விரும்புவார்கள் என தான் நம்பவில்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக் தெரிவித்தார்.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 92 − = 82

Back to top button
error: