நாவிதன்வெளியில் சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (25) பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
விதாதா வள நிலையத்தின் “கிராமத்திற்கு ஒரு பயனாளி” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பதினொரு இலட்சம் ரூபா செலவில் 20 கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 18 பயனாளிகளுக்கு வாழ்வாதார ஊக்குவிப்பு சுயதொழில் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேச செயலகத்தின் கணக்காளர் றிஸ்வி யஹ்சர், விதாதா வள நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.மபாஸ், வெளிக்கள இணைப்பாளர் கே. நவநீதன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு பயணிகளுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு இயந்திரங்களை வழங்கி வைத்தனர்.