crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த ஏப்பிரல் 18 ஆந் திகதி தொடக்கம் ஏப்பிரல் 22 ஆந் திகதிவரையான காலப்பகுதியில் 24 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்தவாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 நோயாளர்களும், ஏறாவூர், கோரளைப்பற்று மத்தி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 05 நோயாளர்களும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 நோயாளர்களும், செங்கலடி, களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி மற்றும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒரு நோயாளர்களுமாக மொத்தம் 24 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்புமாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரை 307 பேர் டெங்குநோய்த் தாக்கத்திற் குட்பட்டுள்ளதாகவும் இதுவரை எவரும் மரணமடையவில்லை எனவும் பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

இதேவேளை பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கிக் கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்குநுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காதவகையில் சூழலை துப்பரவாக வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 55 + = 61

Back to top button
error: