கிராமிய நூலகங்களுக்கு நூல்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடா வருடம் செயல்படுத்தப்பட்டு வருகின்ற கிராமிய நூலகங்களுக்கு நூல்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2022 ஆண்டில் நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட ஜந்து நூலகங்களுக்கு தலா 10.000.00 ரூபா பெறுமதியான நூல்கள் இன்றையதினம் (27) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டன.
பூநகரி பொது நூலகம், கரைச்சி பொது நூலகம், கிளி/பளை மத்திய கல்லூரி நூலகம், கிளி/ பிரமந்தனாறு மகா வித்தியாலய நூலகம், கிளிநொச்சி மாவட்ட செயலக நூலகம் ஆகியவற்றிற்கு நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்கனவே பொது நூலகங்கள் மற்றும் பாடசாலை நூலகங்கள் உள்ளடங்கலாக 26 நூலகங்களுக்கு நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஶ்ரீமோகனன், உதவி மாவட்ட செயலர் திரு.ஜெ.றெமின்ரன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு.கா.இராசதுரை, கரைச்சி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.வே.தர்மபாலன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்