crossorigin="anonymous">
உள்நாடுபொது

மண்ணெண்ணை பெற நீண்ட வரிசையில் காத்திருந்த தந்தை மரணம்

ஹட்டனில் மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 5 மணித்தியாலயங்களுக்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்த ஹட்டன் – தும்புறுகிரிய வீதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 55 வயதான தேவநாயகம் கிருஸ்ணசாமி, ஹட்டன் நகர வர்த்தகர் இன்று (27) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த குறித்த நபர், நேற்று (26) மாலை 5.00 மணியளவில் மண்ணெண்ணையைப் பெறுவதற்காக, எரிபொருள் நிலையத்துக்கு சென்று, சுமார் இரவு 11.00 மணியளவில் வீட்டுக்கு வருகைத் தந்ததாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

வீட்டுக்கு வந்த அவர், தனக்கு அதிகம் சோர்வாக இருப்பதாக தெரிவித்து, வாந்தியும் எடுத்துள்ளதுடன், நித்திரைக்குச் சென்றுள்ளார்.

பின்னர் அதிகாலை தனது கணவர் நித்திரையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள அவரது மனைவி, இதற்கு முன்னர் தனது கணவருக்கு எவ்வித நோய்களும் இருக்கவில்லை என்றும் மண்ணெண்ணெய் பெறுவதற்காக பல மணி நேரம் காத்திருந்தமையாலேயே தனது கணவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் பொலிஸார் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 15 + = 19

Back to top button
error: