crossorigin="anonymous">
உள்நாடுபொது

தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக தபால் ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பு

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று (28) முன்னெடுக்கப்படும் அரசுக்கு எதிரான வேலை நிறுத்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தபால் ஊழியர்களும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்

இலங்கை முழுவதும் காணப்படும் 653 தபால் காரியாலயங்கள், மற்றும் 3 ஆயிரத்து 410 உப தபால் காரியாலயங்களின் பணியாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றன.

அதேவேளை இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் ஏனைய வங்கி தொழிற்சங்கங்களும் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க தீர்மானித்துள்ளதாக வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய வேலை நிறுத்த போராட்டத்திற்கு வங்கித் துறையினர் ஆதரவு வழங்கியுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 5 =

Back to top button
error: