crossorigin="anonymous">
உள்நாடுபொது

இந்தியன் ஒயில் நிறுவனமும் பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இணைந்து விலைச் சூத்திரம் அறிமுகம்

இந்தியன் ஒயில் நிறுவனம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து விலைச் சூத்திரமொன்றை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும், இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர  தெரிவித்தார்.

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு முன்னிலையில் இன்று (28) கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.

இந்த இரு அமைச்சுக்களுக்கும் புதிய செயலாளர்கள் இருவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போதைய நிலைமைய முகாமைத்துவம் செய்து எதிர்வரும் சில நாட்களில் இப்பிரச்சினைகளை வெற்றிகொள்ள அதிகாரிகளுடன் இணைந்து முடிந்தளவு முயற்சித்து வருவதாகவும் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்களுக்கு அமைச்சர் எடுத்துக் கூறினார். அத்துடன், இந்த நிலைமைக்கான காரணங்கள் மற்றும் நிர்வாகத்தில் காணப்பட்ட குறைபாடுகள் அடங்கிய விரிவான அறிக்கையொன்றை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க முத்துராஜவல முனையம் இருபத்தி நான்கு மணித்தியாலங்களும் இயங்குவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலைமையிலான பணியாளர் குழாம் முடிந்தளவு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 54 − 52 =

Back to top button
error: