crossorigin="anonymous">
உள்நாடுபொது

யாழ் முஸ்லிம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் நல்லிணக்க இப்தார் நிகழ்வு

யாழ் முஸ்லிம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் முஸ்லிம் வர்த்தகர்களின் நிதி அனுசரணையில் மாபெரும் நல்லிணக்க இப்தார் நிகழ்வு நேற்று முன்தினம் 28.04.2022 அன்று யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி உள்ளக மைதானத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். மேலும் இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ். சுதர்சன் அவர்களும், யாழ் மாநகர ஆணையாளர் . த. ஜெயசீலன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

இவ் நல்லிணக்க இப்தார் நிகழ்வில் விசேட உரைகளை மௌலவி எம்.ஏ. பைசர் (மதனி) , மௌலவி ஏ. எம். ரழீம், மௌலவி ஏ.டபள்யூ. பி. அன்பர் (நஜாஜி) உள்ளிட்டோர் வழங்கியிருந்தனர். ஏற்பாட்டுக்குழு சார்பில் யாழ் முஸ்லிம் சிவில் சமூகம் சார்பில் எம்.எம்.எம். நிபாஹிர் அவர்கள் தலைமை உரையினை வழங்கியிருந்தார்.

இப்தார் நிகழ்வில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள், யாழ் பிரதேச செயலக அதிகாரிகள், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ். சுகர்தன், கிராம அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள், யாழ் மாவட்ட பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், உலமாக்கள் கலந்து கொண்டிருந்தனர்

நிகழ்வில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி மற்றும் கதீஜா மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள், முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஜே 88, ஜே 85 கிராமங்களை சேர்ந்த இந்துமத சகோதரர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 64 − = 55

Back to top button
error: