crossorigin="anonymous">
வெளிநாடு

ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேர மின் வெட்டு அமுல்

பாகிஸ்தானில் பொருளாதார நிதி நெருக்கடி நிலவி வருகிறதுடன் பாகிஸ்தானின் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததாலும், கடுமையான விலை உயர்வாலும் பாகிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பும் ஒரு டாலருக்கு 185 ரூபா என்ற அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது

பாகிஸ்தானில் நிலக்கரி வாங்க அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததால் கடுமையான மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி ஆலைகளில் போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை.அங்கு சுமார் 6,000 – 7,000 வரை மின் மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தானில்  கிராமப்புறங்களில் ஒரு சில பகுதிகள் ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது அதேவேளை இதன்காரணமாக பாகிஸ்தானில் மக்கள் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

பாகிஸ்தானில் இவ்வாறான பொருளாதார நெருக்கடி காரணமாகவே இம்ரான் கான் அரசு பதவி விலக வேண்டும் என எதிர்ப்பு எழுந்து பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ளார். இருந்தபோதிலும் பொருளாதார நெருக்கடி குறைந்தபடில்லை

பாகிஸ்தானில் நகர பிரதேசங்களில் 6 – 10 மணி நேரம் வரையிலும் மற்றும் கிராம பிரதேசங்களில் ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் மின் வெட்டு நடைமுறையிலுள்ளது இதனால் அங்கு வாழும்  பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண மக்கள் வீடுகளில் பயன்படுத்தும் மின்சார பாதிப்பு மட்டுமின்றி தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரமும் இல்லாததால் பொருளாதார பாதிப்பு மேலும் அதிகரித்து வருகின்றன

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 86 − 80 =

Back to top button
error: