இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (2) முக்கிய உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் மாற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனாவின் உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி தலைமையிலான இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.
சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்வைத்த இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் யோசனை தொடர்பிலும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது