இலங்கையில் இயங்கும் தனியார் வைத்தியசாலைகளில் பாரிய மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதன்காரணமாக தனியார் வைத்தியசாலைகளில் அவசர சத்திர சிகிச்சைகளை மாத்திரம் முன்னெடுக்க தனியார் வைத்தியசாலை மற்றும் நேர்சிங் ஹோம் சங்கம் தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கலாநிதி ஆனந்த குருப்பு ஆராச்சி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
தனியார் வைத்தியசாலைகளில் பாரிய மருந்து தட்டுப்பாடு மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் தட்டுபாடு குறித்து சுகாதார அமைச்சு மற்றும் தனியார் சுகாதார சேவை ஒழுங்குப்படுத்தும் சபைக்கு அறிவித்துள்ளதாக தனியார் வைத்தியசாலை மற்றும் நேர்சிங் ஹோம் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகரித்துச் செல்லும் பாரிய மருந்து தட்டுப்பாடு மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் தட்டுபாடு மருந்துகளுக்கான பற்றாக்குறை காரணமாக அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இயங்கும் 200 தனியார் வைத்தியசாலைகளில் 76 வகையான மருந்துகளுக்கு தட்டுபாடு காணப்படுவதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
பாரிய மருந்து தட்டுப்பாடு மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் தட்டுபாடு காரணமாக மருந்துகளையும் வைத்திய உபகரணங்களையும் நன்கொடையாக இலங்கைக்கு வழங்குமாறு வெளிநாடுகளிலுள்ள இலங்கையரிடம் தனியார் வைத்தியசாலை மற்றும் நேர்சிங் ஹோம் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது