crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

குவைட் நாட்டு நிதி பங்களிபில் மாஞ்சோலை வைத்தியசாலையில் கட்டிடம்

முல்லைத்தீவு மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் கட்டிடமொன்றின் தேவையை கருத்திற் கொண்டு அப்பகுதி மக்களும் வைத்திய அதிகாரிகளும் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களிடம் விடுத்த கோரிக்கையை ஒன்றை முன்வைத்திருந்தனர்.

இந் நிலையில் குவைட் நாட்டின் நிதி பங்களிப்புடன் ISRC தனியார் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் சுமார் 35 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள (தளபாடங்கள் உள்ளடங்கலாக) வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் 30.04.2022 இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் கிராமிய பொருளாதாரப் பயிர்ச்செய்கை மற்றும் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோகப்பூர்வமாக அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்வைத்தியர் .உமாசங்கர், ISRC தனியார் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.. சயாப், முஸ்லிம் ஹேண்ட் (Muslim hand) நிறுவனத்தின் பணிப்பாளர் ஜனாப். மிஹ்லார் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள், நிர்வாகத்தினர், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 5

Back to top button
error: