கொழும்பு – காலிமுகத்திடலில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலக கோரி இடம்பெறும் ஆர்ப்பாட்ட பூமியில் இன்றைய தினம் (03) புனித நோன்பு பெருநாள் தொழுகை திறந்த வெளியில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுள்ளது
இஸ்லாம் மார்க்கத்தின் ஐம்பெருங் கடமைகளில் நான்காவது கடமையான நோன்பை, ரமழான் மாதம் முழுவதும் நோற்ற பின்னர் ஈதுல் பித்ர் பெருநாள் எனும் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகின்றது
காலிமுகத்திடலில் புனித நோன்பு பெருநாள் தொழுகையின் பின்னர் விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றுள்ளன
காலிமுகத்திடலில் புனித நோன்பு பெருநாள் தொழுகையை தொடர்ந்து பெளத்த, கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மத தலைவர்கள் உட்பட அங்கு குழுமியிருந்த அனைத்து இன பொதுமக்கள் மத்தியில் விசேட உணவுகளும் பரிமாறப்பட்டுள்ளன
இலங்கை வாழ் இஸ்லாமியர்களான முஸ்லீம் பிரஜைகள் இன்றைய தினம்செவ்வாய் கிழமை புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர். நோன்பு பெருநாளை முன்னிட்டு இலங்கை முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று காலை விசேட பெருநாள் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றது .