சீன அரசாங்கம் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை கவனத்திற்கொண்டு இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்காக 300 மில்லியன் யுவான் நிதி கடனாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சீன தூதுவராலயம் நேற்று (04) தெரிவித்துள்ளது.
சீன அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் அவசர தேவைகளுக்கான நிதி உதவி 500 மில்லியன் யுவானாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அது 76 மில்லியன் அமெரிக்கன் டொலராகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும்கும் சீனப் பிரதமர் லீ கெகியாங்கிற்குமிடையில் தொலைபேசி மூலமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு இணங்கவே மேற்படி நிதியுதவியை வழங்குவதற்கு சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதமர் அலுவலகம் இது தொடர்பில் தெரிவிக்கையில்
நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் மற்றும் எரிபொருள் கொள்வனவுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.