crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை முழுவதும் ஹர்த்தால் முன்னெடுப்பு

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணுமாறும் கோரியும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராயபக்ச மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் இன்று (06) வெள்ளிக் கிழமை இலங்கை முழுவதும் ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது

பொது சுகாதார பரிசோதகர் சங்கமும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக 011 263 5675 எனும் விசேட தொலைபேசி இலக்கத்தை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கை முழுவதும் இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு சுகாதார தரப்பினர், ஆசிரியர்கள், பல்கலைக்கழக தரப்பினர், போக்குவரத்து, வங்கி, இலங்கை தபால் சேவை ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்

கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் VIP மற்றும் CIP எனப்படும் வணிக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களுக்கான சேவைகளை இன்று முதல் நிறுத்துவதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளதுடன் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் அனைத்து ஹோட்டல்களிலும் கறுப்புக் கொடியை பறக்கவிடுமாறும் ஹோட்டல்களுக்கு முன்பாக கவனயீர்ப்பை முன்னெடுக்குமாறும் ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரயில் இயக்கப் பணியாளர்கள், தொழிற்பாடுகள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டுப் பணியாளர்கள், நிலைய அதிபர்கள் நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பேருந்துகளை இயக்குவதில் இருந்து விலகுவதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + = 12

Back to top button
error: