crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

பெண்கள் தலைமைதத்துவ குடும்பங்களை வலுவூட்டும் திரியமங்பெத்த நிகழ்ச்சி

பெண்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக வலுவூட்டும் நோக்கில் தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வரும் திரியமங்பெத்த நிகழ்ச்சித்திட்டமானது அம்பாரை மாவட்ட பெண்கள் அபிவிருத்திப் பிரிவின் பங்கேற்போடு மாவட்டம் பூராகவும் பெண்கள் அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளுக்கு சுயதொழில் முயற்சிகளை வலுவூட்டுவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்தொடரில், திரியமங்பெத்த நிகழ்ச்சித்திட்டமானது அவர்களின் தலைமையில் இம்மாதம் கடந்த 05 ஆம் திகதி வியாழக் கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களை பொருளாதார ரீதியாக அவர்களின் சுயதொழில் முயற்சிகளை ஊக்கிவித்து மேலும் வலுவூட்டுவதன் மூலம் நிலைபேறான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு அவர்களுக்குத் தேவையான கணக்கீட்டு முறைகள், நாளாந்த கணக்கீட்டு பதிவேட்டு முறைகள், வருமானத்தை கூட்டுவதற்கான வியாபார உக்திகள் தொடர்பில் ஒரு நாள் செயலமர்வாக இந்நிகழ்வு இடம்பெற்றது.

இச்செயலமர்விற்கு வளவாளர்களாக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சுரேக்கா மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவு மாவட்ட உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்.

பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர். றிஸ்வானுல் ஜன்னாஹ், பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் ஆர்.எஸ். றிம்ஸியா ஜஹான், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.சபறுல் ஹஸீனா, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. றிஷாட் ஆகியோர் கலந்துகொண்டு செயலமர்வை நடாத்தி வைத்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 34 + = 37

Back to top button
error: