crossorigin="anonymous">
உள்நாடுபொது

பேராதனைப் பல்கலைக்கழக வேந்தராக பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் நியமனம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் இன்று (06) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

1960 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் முதல் தரப் பட்டம் பெற்ற பேராசிரியர் ஜி.எச் பீரிஸ் அவர்கள், 1965இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார புவியியல் துறையில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்
.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக தனது முதல் நியமனத்தைப்பெற்ற அவர், 44 வருடங்களாக பல்கலைக்கழக விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.

பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் அவர்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் அரசியல் மாற்றம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ள நிபுணர் ஆவார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 74 + = 75

Back to top button
error: