crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஹர்த்தாலினால் இலங்கை முழுவதும் பணிகள் முடக்கம்

இலங்கை முழுவதும் நேற்று (06) தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் நடவடிக்கை காரணமாக நாடளாவிய ரீதியில் அன்றாட நிர்வாக பணிகள் முடங்கி ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டது

கொழும்பு புறக்கோட்டை உள்ளிட்ட நாட்டின் பல பிரதான வர்த்தக நகரங்கள் மூடப்பட்டதுடன் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தது.

.ஆசிரியர், அதிபர்கள் நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளதன் காரணமாக பல பாடசாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன.

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்படும் பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதவளித்து நாட்டின் பல பாகங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணுமாறும் கோரியும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராயபக்ச மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியுமே நேற்று இலங்கை முழுவதும் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 30 + = 33

Back to top button
error: