crossorigin="anonymous">
உள்நாடுபொது

அவசர நிலைமை அமுல்!, புரிந்து கொள்வது கடினம் – கனேடிய உயர்ஸ்தானிகர்

இலங்கையில் அண்மைக் காலங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் மக்களின் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் தெரிவித்துள்ளார்.

இவை நாட்டின் ஜனநாயகத்துக்கு பெருமையை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தாகவும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.

இலங்கையில் அவசர நிலைமையை அமுல்ப்படுத்த வேண்டிய தேவை குறித்து புரிந்து கொள்வது கடினமாக அமைந்துள்ளதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் வர்த்தமானியை மீளப்பெற்று மக்களின் அமைதியான முறையில் ஒன்று கூடும் சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்த முன்வர வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் ஜனாதிபதியை கோரியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 63 + = 67

Back to top button
error: