ஐக்கிய மக்கள் சக்தி இலங்கையில் நிலவும் நெருக்கடியை தீர்ப்பதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த ஆலோசனைகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள (07) ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கும் வேலைத்திட்டம் மற்றும் இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணுதல் ஆகியன அடிப்படை அவசியமான விடயமாக கருதப்படுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கி, பொருளாதார நிலைத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு நெருக்கடியை தீர்ப்பது தொடர்பான தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஒத்துழைப்பை வழங்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.