crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய 104 வது வருடாந்த பெருவிழா

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தின் 104 வது வருடாந்த பெருவிழா எதிர்வரும் 22 திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.15 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி அனிஸ்டன் மொறாயஸ் அடிகளார் தலைமையில் திருச்செபமாலையினை தொடர்ந்து கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

அதனைத் தொடர்ந்து நவநாட்காலங்களில் தினமும் 5.30 மணிக்கு திருச்செபமாலையும், பிரார்த்தனையும் அதனைத் தொடர்ந்து நவநாள் திருப்பலியும் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 21.05.2022 சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு முதல் நன்மை மற்றும் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் திருப்பலியானது மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு யோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

அத்தோடு சனிக்கிழமை மாலை 5.15 மணிக்கு புனிதரின் திருச்சுருவப் பவனி வழமையான வீதிகள் ஊடாக சென்று ஆலயத்தை வந்தடைந்த பின்னர் திருப்புகழ்மாலை ஆராதனையும், நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறவுள்ளது.

நவநாட் காலங்களில் அருட்தந்தையர்களான அருட்பணி ரீ.சாயநாதன் S.J, றொஷான் சுவைக்கீன் S.J, லெபோன் சுதன் OMI, ஏ.தேவதாசன், ஏ.ஜென்சன் லொயிட், எஸ்.ஜே.சுலக்ஷன், சீ.வீ.அன்னதாஸ், எஸ்.ஜோசப் அற்புதராஜ் SJ மற்றும் அருட்தந்தை நிர்மல் சூசைராஜ் JDH உள்ளிட்ட அடிகளார்களினால் சிறப்பு அருளுரைகளுடன் கூடிய திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.

பெருவிழா தினத்தன்று 22.05.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு முதலாம் திருப்பலியும், காலை 7.00 மணிக்கு பெருவிழா கூட்டுத்திருப்பலியாது அருட்பணி எக்ஸ்.ஐ.ரஜீவன் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

பெருவிழா கூட்டுத் திருப்பலியினைத் தொடர்ந்து புனிதரின் இறுதி ஆசீருடன் கொடியிறக்கப்பட்டு பெருவிழா இனிதே நிறைவுபெறவுள்ளது.

பெருவிழா சிறப்பு நிகழ்வாக அன்னதானம் வழங்குதலும், அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு டொம்போலா விளையாட்டும் இடம்பெறவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 3 + 6 =

Back to top button
error: