கொழும்பு – கொள்ளுபிட்டிய அலரிமாளிகைக்கு முன்பாக இருந்த போராடடக்காரர்களின் “மைனாகோகம” மீது தற்போது (09) ஒரு குழு தாக்குதல் நடத்தி அங்கிருந்த கூடாரங்களை கிழித்தெறிந்துள்ளது இதனால் அப்பிரதேசத்தில் கடும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது
“மைனாகோகம” யில் கூடாரங்களை தீ மூட்டி கொளுத்திய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள், காலிமுகத்திடலுள்ள “கோட்டா ஹோ கம” மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கும் பெரும் பதற்றம் நிலவுகின்றது.
அங்கு விரைந்த பொலிஸ் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனமும், “கோட்டா ஹோ கம” மீதே நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன அத்துடன், கண்ணீர் புகைக்குண்டு வீச்சு தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலக வேண்டாமென வலியுறுத்தி ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் அலரிமாளிகைக்கு உள்ளேயும் வெளியேயும் முன்னெடுக்கப்படுகின்றன.