கொழும்பில் மறு அறிவித்தல் வரை மறு அறிவித்தல் வரை பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வரும் வரையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தற்போது (09) அறிவித்துள்ளது.
கொழும்பு – கொள்ளுபிட்டிய அலரிமாளிக்கைக்கு முன்னும் மற்றும் காலிமுகத்திடலுள்ள “கோட்டா ஹோ கம” மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தபட்டதை தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளமை அடுத்தே இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வரும் வரையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களால், நாட்டில் கடந்த 30 நாட்களாக மிக அமைதியாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமையைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல்களில் 23 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
பிரதமரின் இல்லமான அலரி மாளிகைக்கை முன்பாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடாத்திய பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், அங்கிருந்து சுமார் 2 கி.மீ. இற்கும் அதிக தூரத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வந்த போராட்டக்களத்திற்கு வந்து அங்கும் சேதம் விளைவித்ததோடு, பலர் மீது தாக்குதல் நடாத்தியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் அமைதியின்மை காரணமாக அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.