21 வது அரசியலமைப்பு திருத்த முன்மொழிவு மக்களின் பரிசீலனைக்காக
இலங்கையில் 21 வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பாரளுமன்ற சுயாதீன உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தி அண்மையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களிடம் கையளிக்கப்பட்ட இரண்டு தனி உறுப்பினர் சட்டமூலங்களையும் மூன்று மொழிகளிலும் பாராளுமன்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
அதற்குரிய இணைப்பு கீழே பாராளுமன்ற இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ளது.
🔗 https://www.parliament.lk/ta/const-amendment-proposals
ஐக்கிய மக்கள் சக்தி பாரளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் 40 பேரை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோர் இந்த தனி உறுப்பினர் சட்டமூலங்களை சபாநாயகரிடம் கையளித்தனர்.
19 வது அரசியலமைப்புத் திருத்தத்தை, திருத்தங்களுடன் 21 வது அரசியலமைப்புத் திருத்தமாகக் கொண்டுவருவதற்கு அண்மையில் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு உறுப்பினர்கள் கூடிய போது தீர்மானித்தனர்.
அதற்கமைய அது தொடர்பான முன்மொழிவுகளை வழங்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அறிவித்தார்.
இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள வரைபுகளில் உள்ள முன்மொழிவுகளின் அடிப்படையில் அரசாங்கத்தினால் அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக இந்த சட்டமூலங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.