crossorigin="anonymous">
உள்நாடுபொது

சட்ட மா அதிபர் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை

கொழும்பு கொள்ளுபிட்டிய மைனாகோகம மற்றும் காலிமுகத்திடல் கோட்டாகோகம அமைதியான போராட்டத்தின் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு இலங்கை சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் பொலிஸ் மாஅதிபருக்கு நேற்று (10) பணிப்புரை விடுத்துள்ளார்.

தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அதற்கான காரணங்களை கண்டறிய உடனடியாக விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கு பொறுப்பான தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்தப் பொறுப்புகளை புறக்கணிக்கக் கூடாது எனவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகைக்கு சென்ற குழுவொன்று வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்று தெரிவித்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 71 − 62 =

Back to top button
error: