கொழும்பு காலிமுகத்திடல் கோட்டாகோகம மற்றும் கொள்ளுபிட்டிய அலரிமளிகை முன் மைனாகோகமவில் இடம்பெற்ற அமைதிப் போராட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவு பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று (11) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலிமுகத்திடல் கோட்டாகோகம மற்றும் கொள்ளுபிட்டிய அலரிமளிகை முன் மைனாகோகமவில் இடம்பெற்ற அமைதிப் போராட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளரின் மேற்பார்வையில், 2 பொலிஸ் அத்தியட்சகர்களின் தலைமையில் இடம்பெற்று வருவதாகவும் மேலும் பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை முழுவதும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை 12 ஆம் திகதி காலை 7 மணி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது