கொழும்பு காலிமுகத்திடல் கோட்டாகோகம மற்றும் கொள்ளுபிட்டிய அலரிமளிகை முன் மைனாகோகமவில் இடம்பெற்ற அமைதிப் போராட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து பல அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் இன்றும் (11) மூன்றாவது நாளாக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.
இடம்பெற்ற அமைதிப் போராட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ‘குண்டர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும், கோட்டாபய வீட்டிற்கு செல்ல வேண்டும்’ என இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
சுகாதாரம், துறைமுகம், மின்சாரம் போன்ற பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள், இந்தப் பணிப் புறக்கணிப்பில் பங்கேற்றுள்ளாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் கூறியுள்ளார்.இதனிடையே, இலங்கை பொது நிர்வாக உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை இன்றும்(11) முன்னெடுக்கப்படுகின்றது.
காலிமுகத்திடல் கோட்டாகோகம மற்றும் கொள்ளுபிட்டிய அலரிமளிகை முன் மைனாகோகமவில் இடம்பெற்ற அமைதிப் போராட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து இன்று (11) பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அதிபர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது.