crossorigin="anonymous">
உள்நாடுபொது

தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப் பகிஷ்கரிப்பு நிறைவு

இலங்கையில் குண்டர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும், கோட்டாபய வீட்டிற்கு செல்ல வேண்டும்’ எனும் பெயரில் அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப் பகிஷ்கரிப்பு இன்று (12) மு.ப 07 மணியுடன் நிறைவுக்கு வந்தது.

‘குண்டர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும், கோட்டாபய வீட்டிற்கு செல்ல வேண்டும்’ எனும் பெயரில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சுகாதாரம், துறைமுகம், மின்சாரம் போன்ற பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள், இந்தப் பணிப்புறக்கணிப்பில் பங்கேற்றதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பொதுநிர்வாக அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பும் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குண்டர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும், கோட்டாபய வீட்டிற்கு செல்ல வேண்டும்’ எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப் பகிஷ்கரிப்பு அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை கருத்திற்கொண்டு இன்று  நிறைவுக்கு வந்தது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 7 = 2

Back to top button
error: