இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸபுதிய அரசாங்கம் ஒன்றுக்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்கு தயார் என தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இன்று (12) அனுப்பியுள்ளார்.
தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு முகங்கொடுத்து இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தயார் என அதில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
மேலும் சில நிபந்தனைகளுக்கமைய, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியின் கீழ் இடைக்கால அரசாங்கம் ஒன்றை, அமைப்பதற்கும் ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் என்ற வகையில் பிரதமர் பதவியை ஏற்கவும் தான் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (11) கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியின் பொதுமக்களுக்கான உரையில் இந்த வாரத்தில் பாராளுமன்றத்தில் பெரும் பான்மையினரின் நம்பிக்கையைக்கொண்ட, அதேபோன்று நாட்டு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய பிரதமர் மற்றும் அமைச்சரவையையும் நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.