பலாங்கொடை பள்ளிகள் பரிபாலன சபையின் தலைவர் எம்.ஜே.எம்.மஹ்தூன் காலமானார்
(நதீர் சரீப்தீன்)
இரத்தினபுரி – பலாங்கொடை பள்ளிகள் பரிபாலன சபையின் தலைவர் தேசகீர்த்தி.அல்ஹாஜ் எம்.ஜே.எம்.மஹ்தூன் அவர்கள் இன்று (12) இறையடி சேர்ந்தார்கள்.
அன்னார் பலாக்கொடையில் 16 பள்ளிகளை நிர்வகித்து பலாங்கொடை பள்ளிகள் பரிபாலன சபையின் தலைவராக 25 வருடங்களாக சேவையாற்றியவராவார்.
இரத்தினபுரியை பிறப்பிடமாகவும். பலாங்கொடையை வசிப்பிடமாகவும் கொண்ட நாடறிந்த பிரபல இரத்தினக்கல் வர்த்தகருமான இவர் தனித்துவ ஆளுமையும். பரோபகார சிந்தனையும் கொண்ட நற்பண்பு, செயற்திறன் மிக்க ஆற்றல் கொண்ட தலைவருமாவார்.
பலாங்கொடை முஸ்லிம் சமூகத்தின் கட்டுக்கோப்பை பாதுகாப்பதற்கு உழைத்தது போலவே பல்லின சமூகத்திற்கு மத்தியில் நல்லிணக்கத்தை பேணுவதிலும் முன்னின்று உழைத்தவர்.
பள்ளிகள் பரிபாலன சபையின் தலைவராக இருந்த காலத்தில் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்மாணம், பைத்துல் ஸகாத், பைத்துல் மால் உருவாக்கம், கல்வி வளர்ச்சிக்காக ஜெய்லானி மத்திய கல்லூரியின் நிர்வாக மற்றும் வாசிகசாலை கட்டடத் தொகுதி நிர்மாணம் போன்ற பல்வேறு சேவைகளைப் செய்துள்ளார்.
(இவ்வாறான அளப்பரிய சேவைகள் ஆற்றி ஊரின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்த அல்ஹாஜ். எம்.ஜே.எம். மஹ்தூன் அவர்களின் பாவங்களை மன்னித்து. அவர் செய்த சேவைகள் அனைத்தையும் அங்கிகரித்து மேலான ஜென்னதுள் பிர்தெளஸ் சுவர்க்கத்தை வழங்குவாயாக. ஆமீன்)