இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இன்று (13) அழைப்பு விடுத்துள்ளது.
கொழும்பு காலிமுகத்திடல் கோட்டாகோகம மற்றும் கொள்ளுபிட்டிய அலரிமளிகை முன் மைனாகோகமவில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதிப் போராட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் சாட்சியம் பதிவு செய்து கொள்வதற்காகவே மனித உரிமை ஆணைக்குழு, மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நேற்று முன்தினம் (11) இராணுவத்தளபதி மற்றும் பொலிஸ் மா அதிபர், நேற்று (12) சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய வாக்குமூலங்களை பதிவு செய்து கொள்வதற்காக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.