இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (14) புதிதாக நான்கு அமைச்சர்களை நியமனம் செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
முழுமையான அமைச்சரவையை நியமிக்கும் வரை பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளின் சட்டபூர்வமான தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக முதற் கட்டமாக நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
புதிதாக நியமனம் செய்யப்பட்ட நான்கு அமைச்சர்கள்
01. பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்: வெளிவிவகாரம்
02. தினேஷ் குணவர்தன: பொது நிர்வாகம், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள்
03. பிரசன்ன ரணதுங்க: நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
04. கஞ்சன விஜேசேகர: மின்சக்தி மற்றும் வலுசக்தி