இங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் புனித வெசாக் நோன்மதி தினச் (15) செய்தி
“மூன்று உன்னதமான நிகழ்வுகள் நடந்த மகத்தான வெசாக் நோன்மதி தினத்தை நினைவுகூர்ந்து, இலங்கை பெளத்த மக்கள் உட்பட உலகெங்கிலும் வாழும் பெளத்தர்கள் பூஜை வழிபாடுகள் மற்றும் புண்ணிய கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.
புத்த பெருமான் போதித்த தம்மப் போதனைகள் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலைபெற்றுள்ளது. சம்புத்த சாசனத்துக்காக போதி மகான்கள் காலம் காலமாக பற்றுறுதியுடன் தியானத்தில் ஈடுபட்டனர். அது அனைத்து உயிர்களினதும் பாதுகாப்பிற்காகவேயாகும்.
புத்த பெருமானிடம் அடைக்கலம் புகுந்தவர்கள், அபரிமித பெளத்த குணங்களைத் தளராத பக்தியுடன் தியானிக்கிறார்கள். அடலோ தம்மத்தால் அசைக்கப்படாத அறம் பற்றிய உண்மைகள் பௌத்த இலக்கியங்களிலும் புத்தரின் வாழ்வு முழுவதிலும் நமக்குப் பொதுவாக கண்டுகொள்ள முடியும். பௌத்த போதனைகளுக்கு ஏற்ப மிகவும் ஆழமாக சிந்தித்து மிகப் பொருத்தமான தீர்வுகளை முன்வைத்த சந்தர்ப்பங்கள் பெளத்தர்களாகிய நமக்கு புதியவை அல்ல.
தஞ்ச கம்மன் கதன் சாது – யங் கத்வா நானுதப்பதி
யஸ்ஸ பதிதோ ஸுமநோ – விபாகன் பதிசெவதி
“ஒருவன் ஒரு செயலுக்காக வருந்தாமல், ஒரு செயலின் பலனை மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் அனுபவித்தால், அவன் அதைச் செய்தவனாவான்” என்று தம்மம் கூறுகிறது.
எனவே கடினமான சூழ்நிலைகளில் விடாமுயற்சியுடன் இருங்கள். நாடு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இத்தருணத்தில் அனைத்துப் பிரஜைகள் சார்பாக, அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து, தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். முதன்மை இலக்கிலிருந்து விலகாமல் எதிர்பார்த்த இலக்கை அடைவதே ஒருமைப்பாட்டு இலக்காக இருக்க வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையை நாம் கவனத்தில் கொண்டு, அனைவருக்கும் நியாயமான தீர்ப்பை வழங்கக்கூடிய ஒரு திட்டத்தை நோக்கி ஒன்றுபட வேண்டும். அதுவே பௌத்த கொள்கை ஆகும். இந்த வெசாக் நோன்மதி தினத்தில், “லிச்சவி” கருத்தை இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தவும், நெருக்கடியைத் தணிக்க ஒன்றிணைந்து செயற்படவும் நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
கொள்கையை அடிப்படையாகக்கொண்டு ஒழுக்கநெறியுடைய, சமயம் சார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதே அனைவரின் பொதுவான குறிக்கோளாக அமைய வேண்டும் என்று இந்த இனிய வெசாக் நோன்மதி தினத்தில் பிரார்த்திக்கின்றேன்.” இங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் புனித வெசாக் நோன்மதி தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்