crossorigin="anonymous">
உள்நாடுபொது

மே 18, LTTE அமைப்பினால் தாக்குதல்? வெளியாகியுள்ள செய்தி

உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை - இலங்கை பாதுகாப்பு அமைச்சு

இலங்கையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி எல்.டி.டி.இ (LTTE) அமைப்பினால் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் ஆராய்ந்து, உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“2022 மே மாதம் 18 ஆம் திகதி இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடத்த விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி, கடந்த மே 13 ஆம் திகதி இந்தியாவில் வெளியாகும் ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல் தொடர்பில் இலங்கை வினவியபோது, அவை பொதுவான தகவலாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு இலங்கைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைக்கும் அனைத்து தகவல்களும் முறையாக விசாரிக்கப்பட்டு, அந்தந்த பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்படும் அதேவேளை பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.”

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான உள்நாட்டு யுத்தத்தின் போதான இறுதி யுத்தத்தின்போது பல இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் மே 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: