வீடுகளை இழந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக வீடுகள் வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்
கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை காரணமாக வீடுகளை இழந்து இடம்பெயர்ந்து வாழும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலவத்துகொட வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடுகளை தற்காலிகமாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
.இடம்பெற்ற வன்முறை காரணமாக அண்மைய நாட்களில் 55 எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் வன்முறையாளர்களால் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் மேலதிகமாக 06 மெய்ப் பாதுகாவலர்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.