“ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கியதன் பின்னணியில் இந்தியா உள்ளது எனப் பலரும் கூறுகின்றார்கள். நாங்கள் அவ்வாறு எதுவும் மேற்கொள்ளவில்லை.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவர் நேற்று (15) சந்தித்துக் கலந்துரையாடியபோதே இதனைக் குறிப்பிட்டார்.
“இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமாகவுள்ளது. ஓர் உறுதியா உறுதியான அரசு அமையப்பெற வேண்டும். அப்போதுதான் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியும்.
ஓர் உறுதியான அரசு அமையப்பெற வேண்டும் என்பதில் கரிசனை செலுத்தினோம். அதேவேளை, பிரதமராக ரணில் அல்ல வேறு யார் வந்தாலும் நாம் தொடர்ந்து பணியாற்றியிருப்போம்” என்றும் இந்தியத் தூதுவர் அந்தச் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.(AJ)
.