
பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருக்கும் இலங்கைக்கு நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான சர்வதேசக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு வெளிநாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களுடன் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் பேசினார்.
கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டி எழுப்புவதே தனது ஒரே நோக்கம் எனக் கூறி இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி, அமெரிக்கத் தூதுவர் ஜுலி ஜே.சங் மற்றும் சீனத் தூதுவர் கி சென்ஹொங் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்து இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஆரம்பகட்டப் பேச்சுக்களை நடத்தினார்.(AJ)